கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

காட்டெருமை மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அகேயுள்ள ஆவாரம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமைகளை சனிக்கிழமை 3 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணி அளவில், 40 அடி ஆழமுள்ள,தண்ணீர் இல்லாத கிணற்றில் கரந்த மலையில் இருந்து வந்த தாய்,சேய் ஆகிய 2 காட்டெருமைகள் தவறி விழுந்து விட்டது. மேலே வர வழியில்லாமல் காட்டெருமைகள் பரிதவித்தது.இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து நத்தம் வனச்சரக அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள்,கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 மணி நேரம் போராடி மீட்டனர். அதைத்தொடர்ந்து வனப்பகுதிக்குள் காட்டெருமைகள் விடப்பட்டது.

Tags

Next Story