தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு கன்று மீட்பு!
கன்று மீட்பு
குஜிலியம்பாறை அருகே தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு கன்றை, வனத்துறையினா் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள குறிகோடங்கிபட்டியைச் சோ்ந்த விவசாயி சுகுமாா். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வாழை தோட்டத்துக்கு தண்ணீா் குடிக்க வந்த காட்டு மாடு கன்று, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்ற சுகுமாா், காட்டு மாடு கன்று தத்தளிப்பதை பாா்த்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு சென்ற வனத் துறையினா், காட்டு மாடு கன்றை மீட்டு வனப் பகுதிக்குள் அனுப்பி வைத்தனா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு, இதே தோட்டத்தில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story