கிணற்றில் இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

கிணற்றில் இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நாசன்கொட்டாய் பகுதியில் சின்னப்பையன் என்பவர், தனது காணாமல் போன கன்றுக்குட்டியைப் தேடிச்சென்றுள்ளார். அப்போது, கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அரூர் காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் இருந்த சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தை பார்க்கும் போது ஐந்து நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இறந்தவர் குறித்து, விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story