செல்போன் சிக்னல் கிடைக்காமல் நரிமேடு குடியிருப்புவாசிகள் அவதி

செல்போன் சிக்னல் கிடைக்காமல் நரிமேடு குடியிருப்புவாசிகள் அவதி

குடியிருப்புகள்

செல்போன் சிக்னல் கிடைக்காமல் நரிமேடு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளகி உள்ளனர்.

செல்போன் சிக்னல் கிடைக்காமல் நரிமேடு குடியிருப்புவாசிகள் அவதி! புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஆயி ரத்து 920 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது . இவற்றில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின் றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ளவோ, வரும் அழைப்புக ளுக்கு பதிலளிக்கவோ முடியாமல் குடியிருப்பு வாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மருத்துவ சேவை உள்ளிட்ட அவசர உதவிக்குகூட செல்போனில் அழைக்க முடியாத நிலை உள்ளதாக குற்றம்சாட்டுகின்ற னர். இதுபற்றி தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story