மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு: மா.சுப்பிரமணியன் திறந்து வைப்பு

மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு: மா.சுப்பிரமணியன் திறந்து வைப்பு

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் மற்றும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை போன்றவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் மற்றும் நாகப்பட்டினம் மருத்துவமனை வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்ட விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை போன்றவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் .வை.செல்வராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் .உ.மதிவாணன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் அவர்கள், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் .வி.பீ.நாகை மாலி அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, மாவட்டத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் வேதாரண்யம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில், கரியாப்பட்டினம் வட்டார பொதுசுகாதார அலகு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில், வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில், திருமருகல் வட்டார பொது சுகாதார அலகு துணை சுகாதார நிலையங்கள்: ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில், பூதங்குடி துணை சுகாதார நிலையம ரூ.35 இலட்சம மதிப்பீட்டில் வடகரை துணை சுகாதார நிலையம் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில், கீழையூர் துணை சுகாதார நிலையம ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், தெற்கு பொய்கை நல்லூர் துணை சுகாதார நிலையம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், அக்கரைப்பேட்டை துணை சுகாதார நிலையம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், கோகூர் துணை சுகாதார நிலையம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், கொத்தன்காடு துணை சுகாதார நிலையம் என ஆக மொத்தம் ரூ.4.95 கோடி செலவில் 11 மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்தார். மருத்துவமனை மூடப்பட்டதாக ஏற்பட்ட வதந்தியை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நூறாண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை 100% முழுமையாக செயல்படும்.

மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ எஸ்கேன் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகியவை உள்ளது தற்போது CTஸ்கேன், விரைவில் அமைக்கப்படும். இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகியவை இங்கு இயங்கி வருகிறது தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனை சிறந்து விளங்குகிறது ஒரத்தூரில் அமையப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியில் தினந்தோறும் ஆயிரம் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் அதுபோல நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 200 இருந்து 300 உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து மருத்துவர காலிபணியிடங்களை நிரப்ப தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41 மருத்துவர்களுக்கு 21 மருத்துவர்கள் தற்போது பணியாரத்தப்பட்டுள்ளனர் மீதமுள்ள 20 மருத்துவர்கள் கூடிய விரைவில் பணியாரத்தப்பட உள்ளனர்.

தற்போது 9 மருத்துவர்கள் சுழற்ச்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளன. முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு பெட்டகத்தினை வழங்கினார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை ஒரு காலிப் பணியிடம் மருத்துவத்துறையில் இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தப்படும். அதுபோல நாகப்பட்டினத்தில் 100% மருத்துவர்கள் நிரப்பப்பட உள்ளனர் என்பதை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அ தெரிவித்தார்.

Tags

Next Story