பணி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

பணி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

பாராட்டு விழா

அரசுப் பள்ளியில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது

பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,தலைமை ஆசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர் கண்ணன் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவில் இருவருக்கும் மாலை அணிவித்து பள்ளிப்பாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ் துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்வின் போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணசேகரன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ,சக ஆசிரியைகள் ஆசிரியர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story