வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

 நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இது குறித்து அவர்கள் கூறியதாவது - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும்.

இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலர் உதவி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வட்டாரந்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மோலாண்மை பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிம ஈப்புகளை வழங்க வேண்டும்.

2024 பாராளுமன்ற தேர்தல் பணியினை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும். உங்கள் ஊரில் உங்களை தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் அதிக பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story