வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருமுருகன்பூண்டியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் , நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆராசா கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,அவிநாசி தொகுதிக்கு ஏற்கனவே 50 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது , அவிநாசி திருமுருகன் பூண்டி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது குடிநீர் திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் குடிநீர் தேவை பூர்த்தி அடையும் , அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது.

முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்த பின்பு விடுபட்ட இடங்களை சேர்க்க அறிக்கை தயாரித்து அளிக்கப்படும் , நீலகிரி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது கட்சி முடிவு எடுக்க வேண்டியது. ஆனால் விருப்பமான தாக்கல் செய்வது எனது உரிமை. விருப்பமனு தாக்கல் செய்வேன் , அவிநாசி தொகுதிக்கு ஏற்கனவே 50 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது , அவிநாசி திருமுருகன் பூண்டி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது குடிநீர் திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் குடிநீர் தேவை பூர்த்தி அடையும்.அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது.

முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்த பின்பு விடுபட்ட இடங்களை சேர்க்க அறிக்கை தயாரித்து அளிக்கப்படும் எனவும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதனை செம்மைப்படுத்துவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் பேட்டி அளித்தார். தொடர்ந்து நீள இரு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அது கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் ஆனால் போட்டியிடுவதற்கான விருப்பங்களும் தாக்கல் செய்வேன். அது எனது உரிமை என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story