மயிலாடுதுறை தொகுதியில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்ஃ தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதிர்வரும் 19.4.2024 அன்று நடைபெற உள்ளது. 4.6.2024 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்படும். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும்,
10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 133264 ஆண் வாக்காளர்களும், 137454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 129763 ஆண் வாக்காளர்களும், 132931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 130162 ஆண் வாக்காளர்களும், 137298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 127410 ஆண் வாக்காளர்களும், 133268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும்,
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். இத்தேர்தலில், வாக்குப்பதிவு தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தினத்தன்று 19 காவல் ஆய்வாளர்களும், 156 உதவி காவல் ஆய்வாளர்களும், 701 காவலர்களும்,
417 ஊர் காவல் படை காவலர்கள் மற்றும் இதர முன்னாள் இராணுவ வீரர்களும், 104 மத்திய காவல் படை காவலர்களும் ஆக மொத்தம் 1397 நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்தார்கள். தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தபால் வாக்குகள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான வாக்குகள் ஆகியவைகள் குறித்து விரிவாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும்,
திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, குடிநீர், மின்சார வசதி, கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவைகளை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ் ராவத் இ.கா.ப., அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் .மு.மணிமேகலை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா,
பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அசோக், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன், திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாபர் சித்திக், திருவிடைமருதூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் .கமலக்கண்ணன், பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் .முத்துக்கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.