சாலை ஓரம் கொட்டும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்"

சாலை ஓரம் கொட்டும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சாலையில் கொட்டப்படும் கழிவுநீர்

சாலை ஓரம், நீர்வரத்து காய்வாய் ஓரம் மாசு ஏற்படுவதோடு, துர்நாற்றம்வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில், ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வாலாஜாபாத், படப்பை சுற்றியுள்ள பல பகுதிகளில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

இந்த வீடுகளில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலமாக வெளியேற்றப்படும் கழிவுநீரை, பிரதான சாலை ஓரம், ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் கொட்டுகின்றனர்.

இதனால், ஏரிகள், சாலை ஓரம், நீர்வரத்து காய்வாய் ஓரம் மாசு ஏற்படுவதோடு, துர்நாற்றம்வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் ஆகிய தனியார் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு நீரை, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை, சிறுமாங்காடு அருகே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதைத் தடுக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள், கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story