காலி குடங்களுடன் சாலை மறியல் !

காலி குடங்களுடன் சாலை மறியல் !

சாலை மறியல்

குடிநீர் பிரச்னை காரணமாக கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் போக்கை கண்டித்து நேற்று காலை 8:15 மணியளவில் உளுந்துார்பேட்டை - சேர்ந்தநாடு சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் போக்கை கண்டித்து நேற்று காலை 8:15 மணியளவில் உளுந்துார்பேட்டை - சேர்ந்தநாடு சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து 8:40 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story