கீழம்பியில் சாலையோர பள்ளம்: நெடுஞ்சாலை துறை சீரமைப்பு
பள்ளம் சீரமைப்பு
காஞ்சிபுரம் --- வேலுார் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கீழம்பி புறவழிச்சாலை இணையும் மும்முனை சாலை சந்திப்பு அருகில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இ
தனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து, விபத்தில் சிக்கி வந்தனர். எனவே, விபத்தை தடுக்கும் வகையில், சாலையோரம் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கீழம்பி புறவழிச்சாலை, மும்முனை சாலை சந்திப்பு பகுதியில், 1,500 மீட்டர் நீளத்திற்கு சாலையோரம் உள்ள பள்ளத்தில் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக மண் நிரப்பி, சாலையை சமன்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது."