ரோட்டரி சங்கம் மற்றும் ஆத்மா மின்மயான அறக்கட்டளை இணைந்து இலவச நீர்மோர்

ரோட்டரி சங்கம் மற்றும் ஆத்மா மின்மயான அறக்கட்டளை இணைந்து இலவச நீர்மோர்
நீர்மோர் பந்தல்
ஈரோட்டில் ரோட்டரி சங்கம் மற்றும் ஆத்மா மின்மயான அறக்கட்டளை இணைந்து இலவச நீர்மோர் வழங்கினர்.

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைத்து, நமது ஈரோட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனுக்காக, நமது ஈரோட்டின் நான்கு மையப்பகுதிகளான வீரப்பன்சத்திரம், பிராமண பெரிய அக்ரஹாரம், திருநகர் காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் நீர் மோர் பந்தல் அமைத்து, இத்திட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

இதனை ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர் EK சகாதேவன் மற்றும் ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் Rtn MD V ராஜமாணிக்கம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள். உடன் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சிவசங்கரன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கமலநாதன், செயலாளர் விக்னேஷ்குமார், பொருளாளர் .சுரேஷ், ஆத்மா அறக்கட்டளையின் செயலாளர் VK ராஜமாணிக்கம், பொருளாளர் சரவணன் மற்றும் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இத்திட்டத்தினை நான்கு இடங்களிலும் தொடர்ந்து 30 நாட்களுக்கு வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கட்டாயம் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story