வீரவநல்லூரில் ரூ.64லட்சம் மதிப்பீட்டில் உபகரணம் வழங்கிய ரோட்டரி சங்கம்
ரோட்டரி சங்கம்
வீரவநல்லூரில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் ரோட்டரி சங்கம் சார்பில் உபகரணம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள மயோபதி பிசியோதெரபி மையத்திற்கு 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ உபகரணங்களும் இயந்திரங்களும் அகில உலக அளவில் 8 ரோட்டரி சங்கங்களின் சார்பில் நேற்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அகில உலக ரோட்டரி ஆளுநர் முத்தையா பிள்ளை தலைமை தாங்கி புதுமையாக வடிவமைக்கப்பட்ட சக்திமான் ரோட்டரி பூங்காவினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story