திருச்செங்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் என்னும் ஆர்எஸ்எஸ் சார்பில் வள்ளலார் 200 வது பிறந்த ஆண்டு, மகாராணி ஸ்ரீ துர்காவதி 500 ஆவது பிறந்த ஆண்டு, வீரசிவாஜி முடிசூட்டிய 350 வது ஆண்டை முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் கோட்ட சங்க சாலக் சுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் மாநில இணைப் பொருளாளர் மகேஸ்வரன், ஆகியோர் முன்னிலையில் சுமார் 200 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சேலம் ரோடு சந்திப்பு, பெரிய பாவாடி தெரு, பூக்கடை சந்திப்பு, வன்னியர் வீதி, நகர காவல் நிலைய வளாகம், சங்ககிரி ரோடு, வழியாக மீண்டும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் நிறைவடைந்தது. அங்கேயே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அனிதா மில் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் அனிதா வேலுமித்ரா, ஆப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் நித்ரா கோகுலநாதன்,ஆர் எஸ் எஸ் வட தமிழக மாநில இணைப் பொருளாளர் மகேஷ் குமார், எஸ் எஸ் டிரேடிங்ஸ் பவின் நரேஷ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்திற்கு வந்த அனைவரையும் நாமக்கல் ஜில்லா சங்க சாலக் ராஜன் வரவேற்றார்.