மழையால் ரப்பர் பால் வடிப்பு பணிகள் பாதிப்பு

மழையால் ரப்பர் பால் வடிப்பு பணிகள் பாதிப்பு

குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.


குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலும் பிரதானமாக இருக்கிறது. மாவட்டத்தில் குலசேகரம், அருமனை, திருவட்டார் கோதையார், குற்றியார் உட்பட பல்வேறு இடங்களில் ரப்பர் மரங்கள் உள்ளது.ரப்பர் மரங்களில் தினம்தோறும், 2 நாட்களுக்கு ஒரு முறை, 3 நாட்களுக்கு ஒரு முறை, வாரத்திற்கு ஒருமுறை என மரங்களின் இனங்களுக்கு ஏற்ப பால்வடிப்பு செய்யப்படுகிறது. பெரும்பாலான ரப்பர் தோட்டங்களில் மழை காலங்களில் பால்வடிப்பு செய்யும் வகையில் ரப்பர் மரங்களில் மழை தடுப்பு குடைகள் கட்டப்பட்டுள்ளன.மாவட்டத்தில் நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் ரப்பர் தோட்டங்களில் மீண்டும் பால்வடிப்பு தொடங்கப்பட்ட போது கடும் வெயில் காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து போதிய அளவில் பால் கிடைக்கவில்லை.

தற்போது கோடை மழை தொடர்ந்து பெய்து வருவ தால் ரப்பர் மரங்களில் பால்வடிப்பு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இயல்புக்கு மாறான இரண்டு காலநிலைகளாலும் ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ரப்பர் தோட்டங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிதமான கோடை மழை பெய்யும் போது மண்ணில் ஈரத் தன்மை ஏற்பட்டு முடக்க மில்லாமல் பால்வடிப்பு நடைபெறும். ஆனால் தற்போது நாள் தவறாறு மழை பெய்து வருவதால் ரப்பர் பால்வடிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story