சபரிமலை சீசன் எதிரொலி: குமரி கோவிலில் போலீசார்  சோதனை

சபரிமலை சீசன் எதிரொலி: குமரி கோவிலில் போலீசார்  சோதனை
குமரி அம்மன் கோவிலில் சோதனை

கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது. சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது

2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story