கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கோவில் திருவிழாவில் தீ விபத்து

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தால் அச்சம்

சேலம் உடையாபட்டி அருகே உள்ள குண்டுகல்லூர் பகுதியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

கோவில் திருவிழாவிற்காக பட்டாசு வெடிக்கப்பட்டது அதில் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அருகாமையில் இருந்த பிளாஸ்டிக் குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்து கடுமையான கரும்புகை கிளம்பியது. இதனை அடுத்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் குடோன் என்பதால் தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்தப் பகுதி முழுவதும் அதிகப்படியான கரும்புகை வெளியேறி வருகிறது இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags

Next Story