சேலம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி
தற்கொலைக்கு முயன்றவர்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆலமரத்து மேடு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை மனைவி லட்சுமி உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஹரிஹரன் கையில் வைத்திருந்த பிளேடால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். இதை எடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கழுத்தில் பலத்த காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவதத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.