சேலம் மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு எஸ்.எஸ்.ஐ. சாவு
சேலம் மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு எஸ். எஸ். ஐ. சாவு
சேலம் மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு எஸ். எஸ். ஐ. சாவு
சேலம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (58). சேலம் மாநகர காவல்துறையில் தெற்கு சரக போக்குவரத்து பிரிவில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். எஸ்எஸ்ஐ தியாகராஜன், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீசார், தியாகராஜன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story