பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் களைகட்டிய விற்பனை
பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்ததால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் இன்று அதிகாலை முதல் வியாபாரம் களைகட்டியது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூசணி, சுரைக்காய் கத்தரிக்காய் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஆலங்குளம் வட்டாரத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டுவந்து குவிந்துள்ளன. இதனால் கத்திரிக்காய் கிலோ 100 ரூபாய் வரை விலை உயர்ந்தது. மற்ற காய்கறிகள் விளையும் ஓரளவு ஏற்றமாக இருந்தது. இதில் வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காய்கறிகள் வாங்கிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story