சாரண இயக்கக் கருத்தரங்கம்
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மழலையர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சாரண இயக்கம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் சாரண இயக்கப்பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. மாவட்ட திரிசாரண ஆணையர் முனைவர் டி.ஓ.சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது. முகாம் செயலர் து.விஜய் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். மாவட்டதுணைத் தலைவர் செ.தங்கவேல், ம.சிவசிதம்பரம், கல்வி நிறுவன முதல்வர் முனைவர் பூர்ணப்பிரியா, மணிகண்டன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் 413 தலைமையாசிரியர்கள், குருளையர் படை பொறுப்பாசிரியர்கள், நீலப்பறவையர் படை பொறுப்பாசிரியர்கள் என 1444 பேர் கலந்து கொண்டனர். இம்முகாமினை தமிழ்நாடு பாரத சாரண சாரண இயக்கத்தின் மாநில அமைப்பு ஆணையர் ஜெ.சக்திவேல், பீட்டர் ஆரோக்கியசாமி, திலகவதி, சி.ரகோத்தமன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம், இரா.இரவிச்சந்திரன், கணேசன், திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர் வ.அருள், மாவட்டத் தலைவர் முனைவர்கள் எஸ்.குணசேகரன், எஸ்.இராமலிங்கம், எம்.முத்துசாமி, மாவட்ட பயிற்சி ஆணையர் இரா.கவிதா, மாவட்ட அமைப்பு ஆணையர் இணைச்செயலர் இரா.சடையம்மாள், மாவட்ட உதவி செயலர்கள் சு.கோபி, தீபக், சி.மணியரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.