உசிலம்பட்டியில் வெடி விபத்துகளை தடுக்க சீல் வைத்து அபராதம்
எம்எல்ஏ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் வேப்பனூத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த தாய்மாமன் ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் வேப்பனூத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற இளைஞர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் உசிலம்பட்டி நகர் பகுதியில் வெடி வெடிப்பதால் ஏற்படும் தொடர் விபத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்., மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியான உசிலம்பட்டி நகர் சாலைகளில் வெடி வெடித்தால் சம்பந்தப்பட்ட இல்ல விழா நடைபெறும் மண்டபத்திற்கு சீல் வைக்க வேண்டும்,
10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொதுமக்கள் அதை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக வெடி வெடிப்பதால், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது., அதை உணர்ந்து பொதுமக்கள் தானாக முன் வந்து வெடி வெடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லது காவல்துறை, நகராட்சி நிர்வாகம் விழிப்புடன் இருந்து வெடி வெடிப்பதை கண்காணித்து, ஓரிரு திருமண மண்டபங்களையாவது சீல் வைத்து அபராத தொகையை வசூல் செய்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும், வெறும் ஏட்டளவில் இருந்தால் வெடி வெடிப்பதும்,
தொடர் விபத்துகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் எனவும். எனவே நகராட்சி நிர்வாகமும், காவல்த்துறையும் இணைந்து வெடி வெடிப்பதை தடை செய்ய வேண்டிய அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்., நானும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறேன், வெடி வெடிப்பதை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என பேட்டியளித்தார்..