பெங்களூருவிலிருந்து அவிநாசிக்கு கத்தப்பட்ட குட்கா பறிமுதல்

பெங்களூருவிலிருந்து அவிநாசிக்கு கத்தப்பட்ட  குட்கா பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்

பெங்களூரில் இருந்து அவிநாசிக்கு கத்தப்பட்ட 399 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல்நிலைய போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்தி நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் காரில் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் அவிநாசி பகுதியில் வசித்து வரும் ஆட்டோமொபைல்ஸ் உரிமையார் புனமாராம் சௌத்ரி என்பதும், தனது கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, புனமாராம் சௌத்ரியை கைது செய்த போலீசார், 77மூட்டைகளில் இருந்த 399 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story