தனியார் விவசாய நிலங்களில் நாளை மரம் வளர்ப்பு கருத்தரங்கம்
அத்தனூரில் நாளை தனியார் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பு கருத்தரங்கம்
நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வனவியல் விரிவாக்க மைய அலுவலர் முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது மாநிலத்தில், வனங்களின் பரப்பு குறைந்து வருவதால் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே வனங்களின் பரப்பை அதிகரிக்க தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒரு மாவட்டத்தில் 33 சதவீதம் வனத்தின் பரப்பு இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது 21.7 சதவீதம் மட்டுமே வனத்தின் பரப்பு உள்ளது. எனவே தனியாருக்கு சொந்தமான தரிசு நிலங்கள், தோட்டங்கள் மற்றும் வயல் வரப்புகளில் மரங்களை நட்டு வனத்தின் பரப்பை அதிகரிக்கவும், வேளாண் காடுகளை உருவாக்கவும், வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் அத்தனூரில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம், விவசாய நிலங்களில் மரம் வளப்பு குறித்து முக்கியத்துவத்தை உனர்த்து வகையில், அவர்களுக்கான வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை 13 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக மையத்தில் நடைபெற உள்ளது. நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில் வனவியல் விரிவாக்க அலுவலர் சாவனாஸ்கான், வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்க உள்ளனர். இக்கருத்தரங்கில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.