சிவகங்கை வர்த்தகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சிவகங்கை வர்த்தகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சிவகங்கை வர்த்தகர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பொய் வழக்கு பதிவு செய்வதாக புகார் தெரிவித்தனர்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நகர் வர்த்தக மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 25 ஆம் தேதி அன்று சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் வர்த்தக சங்கம் மற்றும் வணிகர்கள் சேர்ந்து புகையிலை விற்பனை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் இனி புகையிலை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு முதல் முறையாக ரூபாய் ஆயிரம் அபராதமும், மீண்டும் விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு 15 நாட்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அறிவுறுத்தி அன்று கலந்து கொண்ட வணிகர்களிடம் உறுதிமொழி கையொப்பம் பெற்றுக் கொண்டனர்.

சிவகங்கை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 25ஆம் தேதி அன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புகையிலை வழக்கு பதிவு செய்யாத நிலையில், 25ஆம் தேதிக்கு முன்பு புகையிலை வழக்கு பதிவு செய்த வணிகர்கள் மீது தற்போது விற்பனை செய்வதாக வழக்கு பதிவு செய்து அவர்களது கடைகளை 3 மாதங்களுக்கு அடைக்கும்படி உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்து வருகின்றனர். இவ்வாறு ஒரே வழக்கில் வணிகர்களுக்கு திரும்பத் திரும்ப தண்டனை அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு வணிகர்களை பாதுகாக்குமாறு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Tags

Next Story