நாகையில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாகையில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் மாவட்டம் ஜவுளித்துறையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், அழைப்பு   விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஜவுளித்துறையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், அழைப்பு இந்திய பொருளாதாரத்தில் ஜவுளி தொழில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலை வாய்ப்பு வழங்குவதில்,

ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற,

இளைஞர்களுக்கு (இருபாலர்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (ளுஐவுசுயு) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் hவவிள:ஃஃவவெநஒவடைநள.வn.பழஎ.in.ஃதழடிளஃ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டுமாய் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, கரூர் அலுவலகத்தை அணுகவும். அணுக வேண்டிய முகவரி : மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்-639 005 மின்னஞ்சல் : சனனவநஒவடைநளமயசரச;பஅயடை.உழஅ தொலைபேசி எண் : 04324- 299 54491- 98945 60869,91-94446 56445

Tags

Next Story