சிறப்பு லோக் அதாலத்: நீதிபதி கந்தகுமார் அழைப்பு
நீதிமன்றம்
நாகப்பட்டினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதி கந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய உச்ச நீதிமன்றம் 2024 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பு லோக் அதாலத் வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மெகா தீர்வு இயக்கத்தின் பலனை பெற நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடர்பான இருதரப்பினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு லோக் அதாலத்தின் நன்மைகள், விரைவான சமரசம் மற்றும் சர்ச்சைகளை தீர்ப்பது மற்றும் சர்ச்சைகளுக்கு செலவு குறைந்த தீர்வினை அளிப்பதாகும்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமாதானமாக முடித்துக்கொள்ள நாகப்பட்டினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் நாகப்பட்டினம் முதன்மை மாவட்ட நீதிபதியும் இதன்முலம் கேட்டுக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விவரங்கள் அந்தந்த வழக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்த இரு தரப்பினரையும் தொடர்பு கொண்டு டெல்லியில் நடைபெற போகும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்திற்கு செல்வதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு வருவதாகவும் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
இதன்முலம் உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இது குறித்து வழக்கறிஞர்கள் விருப்பங்களை தெரிவித்து வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 1683 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.இவ்வாறு அந்த செய்தி குரூப்பில் கூறியுள்ளார்