மயிலாடுதுறை அருகே காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டவர்கள்
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினமான இன்று ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டி தாகத்துடன் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு க விக்னேஸ்வர பூஜையுடன் ஸம்வத்ஸராபிஷேக யாகத்துடன் வருடாபிஷேகத்துக்கான சதசண்டி யாகம் தொடங்கியது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்று கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால ஸம்வத்ஸராபிஷேக யாகம் மற்றும் சதசண்டீ யாகம் துவங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story