சேலம் போக்குவரத்துக்கழகம் சார்பில் நிதியுதவி

சேலம் போக்குவரத்துக்கழகம் சார்பில் நிதியுதவி

நிதியுதவி வழங்கல் 

சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் மண்டலத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின்படி இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த மாதம் இயற்கை மரணம் அடைந்த 3 பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பணி ஓய்வு பெற்ற 6 பணியாளர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலையை சேலம் மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி நேற்று வழங்கினார்.

தொழிலாளர்கள் உதவும் கரங்கள் நிதி திட்டத்தின் கீழ் இந்த காசோலைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், இயற்கை மரணம் அடைந்த பணியாளர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story