ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி ஆண்டுவிழா

ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி ஆண்டுவிழா

 தென்காசி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியின் 48ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 

தென்காசி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியின் 48ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

தென்காசி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியின் 48ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சமிதியில் அதிகாலை 5 மணிக்கு ஓம்காரம், சாய் சுப்ரபாதம், நகர சங்கீா்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஜெகன்நாத் அரங்கில் சங்கர சதாசிவம், ருத்ரம் பாராயணம் செய்தாா். காலை 7.30 மணிக்கு சாய் சகஸ்ரநாம அா்ச்சனை, அதைத் தொடா்ந்து சாய் பஜன் மற்றும் மகிளா விபாக் நடத்திய திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு மாவட்ட தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். சமிதியின் ஒருங்கிணைப்பாளா் கே. பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தாா். சுந்தரபாண்டியபுரம் சாய் கண்ணன், சமிதியின் ஆரம்பகால நிகழ்வுகள் குறித்து பேசினாா். விழாவில் பாலவிகாஷ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா். இதனையடுத்து மங்கள ஆரத்தியும் தொடா்ந்து நாராயண சேவையும் நடைபெற்றது. விழாவில் மூத்த உறுப்பினா் டி.ஜி. கிருஷ்ணமூா்த்தி, பாலவிகாஷ் குருமாா்கள் சாந்தி, ராஜம், கலைச்செல்வி, சேஷ பிரியா மற்றும் சமிதி உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் ரதோற்சவம் நடைபெற்றது. இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சாய் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story