சாலை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாலை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுராந்தகத்தில் சாலை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுராந்தகத்தில் சாலை மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அருகே மதுராந்தகம் ஒன்றியம், சின்னவெண்மனி ஊராட்சிக்கு உட்பட்ட பீமேஸ்வரன் கோவில் தெருவில், பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து இருந்ததால், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 7.80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 160 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்து ஒரு மாதமே ஆன நிலையில், சிமென்ட் சாலையின் ஓரங்களில் விரிசல் அடைவதாகவும், மேற்பரப்பில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து புழுதி பறப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சின்னவெண்மனி கிராமத்தில் உள்ள பீமேஸ்வரன் கோவில் தெருவில், சாலை சேதமடைந்து, பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த மாதம், புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை தரமாக அமைக்கப்படாததால், சாலை ஓரத்தில் உடைப்புகள் ஏற்படுகின்றன. மேலும், அடுத்த மாதம் எட்டியம்மன் கோவில் தேர் திருவிழா நடக்க உள்ள நிலையில், சிமென்ட் சாலை வழியாக தேர் சென்றால், சாலை மேலும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலையை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story