நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் நவோதயா பள்ளி மாணவர்கள் சாதனை !
Navodaya School
நவ :16 நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக வன உயிரின பாதுகாப்பு வார விழா கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்ததில் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஒவியப்போட்டி, வினாடி வினாப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் நவோதயா பள்ளி மாணவர்கள் ம. நிதின் (5ஆம் வகுப்பு ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசும்,) ஆறாம் வகுப்பு த.சாதனாஸ்ரீ (தமிழ்க் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும்) விஷ்னுகாஷன் (பதினோராம் வகுப்பு ஆங்கிலம் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும்) ரியா சரணவன் (பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கிலம் பேச்சுப் போட்டியில் இரண்டாவது பரிசும் பெற்றுள்ளனர். பரிசு பெற்ற அனைருவக்கும் கடந்த 14.11.2024 வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில். மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் அவர்கள் இனைந்து சான்றிதழ், மெடல், மற்றும் பரிசுக் கோப்பையை வழங்கி பாரட்டினார்கள்.
பரிசு பெற்ற அனைவருக்கும் இன்று காலை பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி அவர்கள் சான்றிதழ் வழங்கி பரிசுக் கோப்பையை வழங்கி வாழ்த்தினார். அவர் பேசுகையில் “ அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு செயலை இன்றைய தலைமுறையாக இருக்கக் கூடிய மாணவர்களிடம் விதைப்பதே ஒரு நல்ல சமூக மாற்றத்திற்கு உரிய செயலாகும், எனவே வன உயிரினங்களைப் பாதுகாப்பது நமது கடமையாகவும், மற்றவர்களுக்கும் நம்மால் முடிந்த வரை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி வாழ்த்தினார்”. பள்ளி “முதல்வர் ஆண்டனி ராஜ் அவர்கள் பரிசு பெற்ற குழந்தைகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த இருபால் ஆசிரியர்களையும் வாழ்த்தி பாரட்டினார்” ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்த்துக்கூறி பாராட்டினார்கள்.