திருத்தணியில் படியில் தொங்கியப்படி பயணம் செய்யும்  மாணவர்கள்

திருத்தணியில் படியில் தொங்கியப்படி ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர்கள் தினமும் தொங்கியப்படி பயணம் செய்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். திருத்தணி சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களிலிருந்து திருத்தணிக்கு பேருந்துகளில் பயணம் செய்து பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

தினமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலையில் கல்லூரி நேரத்தில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால் வேறு வழியின்றி கூட்ட நெரிசலில் மாணவர்கள் பயணம் செய்வதோடு, படிகளில் தொங்கிய படியும், ஜன்னல் கம்பிகள் பிடித்துக் கொண்டும், தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கல்லூரியில் தேர்வு நடைபெறுவதால், சுமார் 300க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு செல்ல பேருந்துகளுக்காக காத்திருந்தனர். கல்லூரி மாணவர்களுக்காக 4 பேருந்துகள் இயக்கப்பட்டது. இருப்பினும் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பேருந்துகளுக்காக காத்திருந்ததால்,பேருந்துகள் போதுமானதாக இல்லாத நிலையில் முட்டி மோதிக் கொண்டும், பேருந்துகளில் தொங்கியபடி, ஜன்னல் கம்பிகள் பிடித்துக் கொண்டும், பேருந்துகளுக்கு பின்னால் நீண்ட தூரம் ஓடிச் சென்று பயணம் மேற்கொண்டனர்.

இதனால் பேருந்து நடத்துனர் மேதுவாக பேருந்து இயக்கியதால், நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டதோடு, மாணவ, மாணவியர் ஏராளமானோர் சுமார் 2 கி. மீ தூரம் கல்லூரிக்கு நடந்துச் சென்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story