சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!!

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!!

Fire Accident

பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தேவையற்ற மின்சார கேபிள்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ சுமார் ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயால் ஏற்பட்ட கரும்புகை பரவி அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story