குமரியில் கோடை மழை - ஒரே நாளில் 2 வீடுகள் சேதம்

X
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் மழையால் இரண்டு வீடுகள் சேதமடைந்தது.
குமரி மாவட்டத்தில் கோடை மழை கடந்த சில நாட்களாக நீடித்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் தக்கலை, வில்லுக்குறி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் நாகர்கோவில், குலசேகரம், மார்த்தாண்டம் களியக்காவிளை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. மலையோர பகுதியில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருயில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது. குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் அகஸ்தீஸ்வரம் மற்றும் கல்குளம் ஆகிய தாலுகா பகுதிகளில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்தன என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. குமரி மாவட்ட அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
Next Story
