பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம்

பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றியக் குழு கூட்டம் 

நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்கி, வேலை அளிக்கக்கோரி அனைத்து ஊராட்சிகளிலும் வரும் ஜூலை.9 ஆம் தேதி மனு அளிப்பது என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியத் தலைவர் பி.ஏ.கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சி.வீரமணி முன்னிலை வகித்தார். இதில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.பக்கிரிசாமி கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானம் : இக்கூட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்கி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூலை.9ஆம் தேதி மனு அளிப்பது, குடிமனைப் பட்டா இல்லாத ஏழைகளுக்கு பாகுபாடு இன்றி குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சட்டக்கூலி ரூ.319ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். வேலையை 200 நாள்களாக அதிகரித்து வழங்க வேண்டும். எதிர்காலத்தில் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி.ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் சித்திரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story