வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

ஜெனீஷ்
கன்னியாகுமரி ஆற்றூர் கொழிஞ்சி விளையை சேர்ந்த கூலித் தொழிலாளி மனோகரன் (53).இவருக்கு 3 மகன்கள். 2வது மகன் ஜெனீஷ் (26), 1 ஆண்டுகளுக்கு முன் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜினி (23 ) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். இருவரும் கணவன் - மனைவியாக மனோகரனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.ஜெனீஷ்க்கு மது அருந்தும் பழக்கமும், புகை பழக்கமும் இருந்ததால் ஒழுங்காக வேலைக்கு செல்வது இல்லையாம்.
கடந்த மாதம் 30 ம் தேதி மார்த்தாண்டத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு ஜினி சென்று விட்டு நேற்று முன்தினம் மதியம் ஆற்றூருக்கு வந்துள்ளார்.ஜெனிஷின் அறை உள்ளே பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது மின்விசிறியில் ஜெனிஷ் கயிறு மாட்டி மயங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை அவசரமாக ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
