வழிவிடாமல் நிறுத்திய அரசு பேருந்தால் அவதி

வழிவிடாமல் நிறுத்திய அரசு பேருந்தால் அவதி

வழியில் நிறுத்திய பேருந்து


நாமக்ல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதி தினசரி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. இதனால் இடைப்பாடி, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிக்கும் செல்லும் பேருந்துகள் ஒரு பகுதியில் மட்டும் வந்து பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது.

ட்ராபிக் காரணமாக போதிய கால அவகாசம் இல்லாமல் அடித்து பிடித்து வரும் பேருந்துகள், பயணிகளை இறக்கி விட்டு பறந்து செல்லும் நிலையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை 03:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நெ.8 எனும் திருச்செங்கோடு செல்லும் அரசு பேருந்து ஓரமாக நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில் நிறுத்தி விட்டு, அதன் ஓட்டுனர் வெளியில் சென்று விட்டார். பின்னால் வந்த பேருந்துகள் போக வழியில்லாமல் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்தனர்.

வெகுநேரம் ஆகியும் வராமல், யாரோ தகவல் சொல்ல, அதன் பின் சாகவாசமாக வந்து பேருந்தை ஓரமாக நிறுத்தி, இதர பேருந்துகளுக்கு வழி விட்டார். இது போல் அத்துமீறி செயல்படும் ஓட்டுனர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story