சேலம் அருகே உடல் உறுப்புகளை தானம் செய்த முதியவர் உடலுக்கு அரசு மரியாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சேலம் அருகே உடல் உறுப்புகளை தானம் செய்த முதியவர் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் அன்னதாப்பட்டியை சேர்ந்தவர் அம்சநாதன் (78). இவர் உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த சில நாட்களாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததார். நேற்று முன்தினம் முதியவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் எடுக்கப்பட்டது.
பின்னர் அவருடைய உடல் நேற்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் முதியவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.
Next Story