சேலம் குகையில் பேருந்தில் பயணித்த மூதாட்டி கழுத்தில் இருந்த நகை மாயம்
கோப்பு படம்
சேலம் குகையில் பேருந்தில் பயணித்த மூதாட்டி கழுத்தில் இருந்த நகை மாயமனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி அலமேலு (60). இவர் நேற்று முன்தினம் குகை பிரபாத் தியேட்டர் பகுதியில் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறினார். சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story