பம்பையில் வாகனங்கள் நிறுத்த தடையை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

பம்பையில் வாகனங்கள் நிறுத்த தடையை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

பம்பை 

கேரளா மாநிலம் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த தடையை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்.அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வரவேற்றுள்ளது.

அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்தின் தேசிய செயலாளர் தினேஷ் அளித்த அறிக்கையில். பம்பையில் பார்க்கிங் வசதி வேண்டும் என பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு கேரளஉயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இச்செய்தி ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.இதை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக கேரளா உயர்நீதி மன்றத்திற்கு நன்றியும் மற்றும் பாரட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக கேரளாஉயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது .இனிவரும் காலங்களில் அகிலஇந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்திற்கு சபரிமலையில் அன்னதானம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கையில்,

குறிப்பிடப்பட்டது . மேலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஐயப்ப சங்களுக்கும் சபரிமலையில் அன்னதானம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக கோரிக்கை! என தேசிய செயலாளர் தினேஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story