பெண்ணை வீடு புகுந்து தாக்கியவர் கைது

பெண்ணை வீடு புகுந்து தாக்கியவர் கைது

பெண்ணை  தாக்கியவர் கைது

வெள்ளிச்சந்தை அருகே பெண்ணை வீடு புகுந்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஆழிக்கால் நடுத்தெருவை சேர்ந்தவர் ஞான சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா என்ற ராஜி (37). இவர்களுக்கு 2பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பா ராஜி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அதே தெருவை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி விஜயன் (40) என்பவர் வீட்டருகே நின்று கொண்டு அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், அக்கம் பக்கத்தினர் பேசி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று புஷ்பராஜி தனியாக வீட்டில் இருந்த போது, பின்பக்க காம்பவுண்ட் வழியாக அத்துமீறி விஜயன் உள்ளே புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி பாட்டிலால் புஷ்பாவில் தலையில் அடித்து காயப்படுத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த புஷ்பா ராஜி ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.

Tags

Next Story