மணமகள் சம்மதிக்காததால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நிறுத்தம்

மணமகள் சம்மதிக்காததால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நிறுத்தம்

காவல் நிலையம்

திருப்பூரில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் சம்மதிக்கதால் திருமணம் நிறுத்தம். தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூரை சேர்ந்த மணமகன்-மணமகள் இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயித்தனர். கடந்த 8-ந் தேதி இரவு திருப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இருவீட்டார் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். சடங்குகள் ஒருபுறம் நடைபெற்றது.

விருந்து மறுபுறம் என தடபுடலாக நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை திருமணத்துக்கான சடங்குகள் தொடங்கியது. பட்டுச்சலை அணிந்து மணமகளும்,பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து மணமகனும் மேடைக்கு வந்தனர்.

மணமகன் தாலியை எடுத்து மணமகளுக்கு அருகே கட்டுவதற்காக சென்றபோது திடீரென்று மணமகள் தாலியை கட்ட விடாமல் பிடித்துக் கொண்டு மேடையில் இருந்து எழுந்தார். மணமகன் செய்வதறியாது திகைத்து நின்றார்.

இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் எவ்வளவோ சமாதானம் செய்தும் தாலி கட்ட மணமகள் சம்மதிக்கவில்லை. அதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் திகைத்து நின்றார்கள்.

சம்பவம் பற்றி அறிந்ததும் தெற்கு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் இரு வீட்டினரும் தங்களுக்குள் சமாதானம் செய்து கொண்டதாக தெரிவித்து போலிசில் புகார் செய்யவில்லை. மணமகள் எதற்காக திருமணத்தை நிறுத்தினார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

இருப்பினும் பெண்ணுக்கு திருமண பிடிக்கவில்லை என்பதால் மனமகனும் அங்கிருந்து சோகத்துடன் வெளியேறினார்.தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story