ஸ்தல விருட்ச மரம் வெட்டிய விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படுமா ?

காஞ்சிபுரம்  கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்தல மரங்களை வெட்டியது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. இதில் முக்கியமான ஸ்தலமாக விளங்குவது காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயில். இத்திரைக்கோயில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மா விளக்கு பூஜை மேற்கொண்டு மண் சட்டியில் அகல் விளக்கு ஏற்றி திருக்கோயிலில் வளம் வந்து வழிபடுவது வழக்கமான ஒன்று .

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஞாயிற்றுக்கிழமையில் கலந்து கொள்வர். காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரசமரதத்துடன் இணைந்த வேப்பமரம்,வில்வ மரம் என இடம்பெற்றுள்ளது.

காஞ்சிபுராணத்தில் அன்று தொட்டு என்றும் அக்காஞ்சியில் நீங்காது அமர்ந்திடும் கொன்றைவார் சடையனைக் கச்சபேசன் தனைக் கும்பிடச்' சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது தீர்ந்து ஒன்றி ஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே - கூறப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்பெற்ற ஆலயத்தில் அமைந்துள்ள மரங்களை இந்து சமய அறநிலைத்துறை வெட்டியதாக தற்போது பக்தர்களிடையே பெரும் புகார் எழுந்துள்ளது.

திருப்பணிக்கு இடையூறாக உள்ளதாக கூறி மரக்கிளைகள் மட்டும் வெட்டியதாக கூறும் அறநிலையத்துறை அந்த மரத்தினை திருக்கோயில் திருப்பணி குடமுழுக்கு விழாவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பயன்படுத்த உபயோகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்ததாக கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடமுழுக்கு யாகசாலையில் பயன்படுத்த ஸ்தலவிருட்சம் என்ற கேள்வி பக்தர்களிடம் எழுந்து தற்போது இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பாஜக இந்து சமய ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் என பலர் இதுகுறித்து இன்று காஞ்சிபுரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அத்துமீறி செயல்பட்டு உள்ள இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இனி எந்த ஒரு திருக்கோயில்களிலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக்கூடாது என இந்து சமய அறநிலைத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story