திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ

திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ

எம்எல்ஏ நல்ல தம்பி

பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ நல்ல தம்பி.
திருப்பத்தூர் மாவட்டம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் திமுக அரசின் சாதனைகளை குறித்து அப்பகுதி மக்களுக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி பெண்களிடம் திமுக அரசு பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் பெண்களுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வருகிறதா எனவும் கேட்டறிந்தார். மேலும் திமுக அரசின் சாதனைகளை குறித்து பெண்கள் சக பெண்களுக்கு தெரிவித்து நீங்கள் திமுக அரசுக்கு ஓட்டு போட வைக்க வேண்டும் மேலும் இது போல் செய்தால் மகளிர் உரிமை தொகை தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும் மற்ற கட்சியினர் வந்தால் அதனை நிறுத்த வழிவகை செய்வார்கள் எனவே அடுத்த முறையும் நீங்கள் திமுகவிற்கே வாக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நான்காவது வார்டு கவுன்சிலர் கௌரி ஐயப்பன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story