இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்திய டூ வீலரை களவாடி சென்ற மர்மநபர்கள் !
காவல் நிலையம்
இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்திய டூ வீலரை களவாடி சென்ற மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு.
இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்திய டூ வீலரை களவாடி சென்ற மர்ம நபர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, தாந்தோணி மலை அருகே உள்ள வஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை வயது 43. இவர் மார்ச் 6-ம் தேதி இரவு 9 மணி அளவில், தனது பணிகளை முடித்துவிட்டு, தனது டூ வீலரை தனது வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு உறங்கச் சென்று விட்டார். மீண்டும் மறுநாள் காலை நாலேகால் மணியளவில், எழுந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. தனது டூவீலர் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்காதால், இது குறித்து காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான அந்த டூவீலரின் மதிப்பு ரூபாய் 40,000 என மதிப்பீடு செய்து, டூவீலரை களவாடிச் சென்ற மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story