தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி எம்டி சாலையைச் சோ்ந்தவா் அா்த்தநாரி மகன் கோவிந்தராஜ் (52), துவாக்குடி தனியாா் நிறுவன வெல்டிங் தொழிலாளி. இவரது சகோதரா் குமரன் (43), துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதி தையல் தொழிலாளி. திருமணமாகாத இருவரும் தாங்களாகவே சமைத்துச் சாப்பிட்டு ஒன்றாக வசித்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் தூங்கச் சென்றனா். அப்போது ஆத்திரத்தில் இருந்த கோவிந்தராஜ் படுத்திருந்த தம்பியை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த குமரன் உயிரிழந்தாா். இதுகுறித்து புதன்கிழமை காலை தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் குமரன் உடலைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கோவிந்தராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story