கண்களில் கருப்பு துணி கட்டி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் சத்துணவு அங்கன்வாடி கிராமப்புற நூலகர் ஊராட்சி எழுத்தர் கிராம உதவியாளர் போன்ற தொகுப்பு புதிய பெற்று ஓய்வு பெற்றவர்களுக்கு ரூபாய் 7850 ஓய்வூதியம் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவு முழுவதையும் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags
Next Story