பெண் தவறவிட்ட பணத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்

பெண் தவறவிட்ட பணத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்
பெண் தவறவிட்ட 38 ஆயிரம் ரூபாயை கண்டுபிடித்து ஒப்படைத்த புதுக்கடை போலீசார்.
புதுக்கடையில் பெண் ஒருவர் தவறவிட்ட பணத்தை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதி மேலவிளையை சேர்ந்தவர் மேரி பிராஸ்கோபி (50). இவர் கடந்த 22- 1 - 2024 அன்று புதுக்கடை அருகேயுள்ள கைசூண்டி சந்திப்பு பகுதியில் வைத்து தனது 38 ஆயிரம் ரூபாய் பணத்தை தவற விட்டார். இது தொடர்பாக அவர் புதுக்கடை போலீசில் புகார் தெரிவித்தார். புதுக்கடை போலீசார் இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். விசாரணையில் பணத்தை எடுத்த நபரை கண்டுபிடித்து , பணத்தை மீட்டனர். தொடர்ந்து மேரி பிராஸ்கோபி தவற விட்ட 38 ஆயிரம் ரூபாயை புதுக்கடை இன்ஸ்பெக்டர் முத்து அந்த பெண்ணிடம் வழங்கினார்.

Tags

Next Story